×

வெளிநாடு சுற்றுலா பயணிகளின் வருகை சரிவு: பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன ஊசி: தாய்லாந்து நாட்டில் மசோதா நிறைவேற்றம்

பாங்காங்: பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ரசாயன ஊசி போடும் திட்டத்தை தாய்லாந்து அரசு கொண்டுவந்து, அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. தாய்லாந்தில் பாலியல் தொழில் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகளவில் பெருகி வருவதாகவும், இதனால் ஏனைய உலக நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதனால் பாலியல் குற்றங்களை தடுக்கும் விதமாக தற்போது தாய்லாந்து அரசு புதிய மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. அதன்படி, தாய்லாந்தில் பாலியல் குற்றம் செய்வோருக்கு பாலியல் ரீதியான தூண்டுதல்களுக்கு காரணமான ‘டெஸ்டொடிரோன்’ என்ற ஓமோனின் செயற்பாட்டைக் குறைக்கும் ரசாயன ஊசிகளை அவர்களுக்கு போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே அவர்களுக்கு தண்டணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை சுமார் 16,413 பாலியல் குற்றவாளிகள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4,848 பேர் மீண்டும் அதே பாலியல் தொழில் ஈடுபட்டனர்.

இதுபோன்றவர்களுக்கு தண்டனை அளிக்கும் பொருட்டே மேற்கண்ட ரசாயன ஊசி போடும் திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. மேற்கண்ட மசோதாவிற்கு 145 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், விரைவில் இம்மசோதா சட்டமாக செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, போலந்து, தென் கொரியா, ரஷ்யா, எஸ்டோனியா, அமெரிக்காவின் சில மாநிலங்களில் மட்டுமே கெமிக்கல் காஸ்ட்ரேஷன் பயன்பாடு சட்டப்பூர்வமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags : Thailand , Sex offender, chemical injection, bill, execution
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...