சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நடிகைக்கு அன்னை தெரசா விருது

மும்பை: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நடிகை தியா மிர்சாவுக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அன்னை தெரசா நினைவு விருதுகள் ஹார்மனி அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். அதன்படி கடந்தாண்டிற்கான அன்னை தெரசா நினைவு விருதுகள் பாலிவுட் நடிகையும், ஐ.நா.வின் சுற்றுச்சூழல் தூதுவருமான தியா மிர்சா மற்றும் ‘ஐ.நா. சாம்பியன் ஆஃப் தி எர்த்’ விருது பெற்ற அப்ரோஸ் ஷா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த விருதை மகாராஷ்டிரா ஆளுநர்  பகத் சிங் கோஷ்யாரி, மேற்கண்ட இருவருக்கும் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ‘சுற்றுச்சூழலுக்கான சேவையானது கடவுளுக்கு செய்யும் சேவையாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பணியாற்றும் தியா மிர்சா, அஃப்ரோஸ் ஷா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். மற்றவர்களும் இவர்களை போல் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும்’ என்றார்.

Related Stories: