மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேச்சு..!!

மதுரை: மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் என தமிழில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக் கொண்டார். மேலும் சிறப்பு விருந்தினராக ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியபின் நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சாதி, மதரீதியாக பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர்கள் கையாண்டனர். வட அமெரிக்காவில் படுகொலைகள் மூலமாக காலனி ஆதிக்கம் நிறுவப்பட்டது.

மத அடிப்படையில் வங்காளம் பிரிக்கப்பட்டபோது வஉசி, பாரதி எதிர்த்தனர். காமராஜர் ஒரு தேசியவாதி. ஜாலியன் வாலாபாத் படுகொலையை கண்டு சுதந்திர போராட்டத்திற்கு வந்தவர் என்று கூறினார். முன்னதாக தமிழக ஆளுநர் தன்னிச்சையான முடிவெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முன்பாக இந்திய மாணவர் சங்கம், சமூக நீதி மாணவர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். இதேபோல், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: