உலக மக்கள் தொகை தினத்தையொட்டி செவிலியர் மாணவிகள் பேரணி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து உறுதி மொழியினை வாசித்தார். இதைத்தொடர்ந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலமாக மாவட்டம் முழுவதும் காசநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இலவச காசநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்வதற்காகவும் வழங்கப்பட்டுள்ள 2 அதி நவீன நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்களையும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

Related Stories: