×

டிவிட்டரை வாங்கும் முயற்சியில் இருந்து பின் வாங்கிய எலான் மஸ்க்: டிவிட்டர் நிறுவனம் வழக்கு

நியூயார்க்: கடந்த சில மாதங்களுக்கு முன் 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டுவிட்டர் நிறுவன பங்குகளை வாங்க டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்டிருந்தார். பின்னர் குறுகிய கால இடைவெளிக்குப் பின் டுவிட்டரில் போலி பயனர் கணக்குகள் குறித்த தகவல்களை அளிக்க தவறியதால், அந்நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கினார். இதுகுறித்து டுவிட்டர் நிர்வாகம் தரப்பில், ‘ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளின்படி ஒப்பந்தத்தை முடிக்கவில்லை  என்றால், எலான் மஸ்க் ஒரு பில்லியன் டாலரை முறிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்ட  நடவடிக்கையைத் தொடர திட்டமிட்டுள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடர டுவிட்டர் திட்டமிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் உள்ள டெலாவேர் நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. அதில், ஒப்பந்தத்தில் அளித்த உறுதிமொழியை எலான் மஸ்க் நிறைவேற்ற உத்தரவிடுமாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Elon Musk ,Twitter , Elon Musk backed out of Twitter takeover bid: Twitter case
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...