இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் உரை..!!

மதுரை: இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருக்கிறார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில்  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய எல்.முருகன், இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் மனித வளம் உலகை ஆண்டு கொண்டிருக்கிறது. உலகை ஆளும் வகையில் புதிய கல்விக் கொள்கை இருக்கும். தேசிய கல்விக்கொள்கை, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கிறது என்று தெரிவித்தார். ஆளுநர், தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக புகார் தெரிவித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் விழாவை புறக்கணித்த நிலையிலும் திட்டமிட்டபடி இன்று விழா நடைபெற்றது.

Related Stories: