×

சத்தீஸ்கரிலும் வெளுத்து வாங்கும் கனமழை: வெளியேற வழி தெரியாமல் மக்கள் அச்சம்

ராய்பூா்: வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குஜராத், சத்தீஸ்காில் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குஜராத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. ராஜ்கூட்டில் பெய்த அடமழையில் சாலைகளில் குளம் போல தண்ணீா் தேங்கியிருக்கிறது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினா்.
கனமழையால் குஜராத்தில் இதுவரை 7போ் உயிாிழந்து இருக்கிறாா்கள். 9,000 போ் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.இதனிடையே வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அம்மாநில முதல்வா் பூபேந்திர படேல் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தாா்.

அதேப்போல சத்தீஸ்கா் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சுக்மா மாவட்டத்தில் கொங்காபெய்ஜி கிராமம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் அந்தப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறாா்கள். சத்தீஸ்காின் காங்கெட் மாவட்டத்தில் உள்ள மெட்டிகி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற நபா் ஒருவா் வெள்ளத்தில் சிக்கி கொண்டாா். வெள்ளத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்த அந்த நபரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மராட்டிய மாநிலம் தானேவில் இருக்கும் திவா பகுதியில் கனமழையால் சாலைகளில் மழைநீா் தேங்கி உள்ளது. மழைநீாில் காரை ஓட்டி சென்ற நபா் ஒருவா் சாலை தொியாமல் அருகிலிருந்த குளத்தில் காரை இயக்கி இருக்கிறாா். உள்ளூா் மக்கள் அவரை பத்திரமாக மீட்டனா்.              


Tags : Chhattisgarh , Chhattisgarh, heavy rain, people, fear
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில்...