×

பெண் ஒருவருக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த வழக்கு!: மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர் ரூ.19 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவு..!!

ஈரோடு: பெண் ஒருவருக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த வழக்கில் ஈரோடு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.19 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 2022ல் நாமக்கல்லை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மனைவி சரோஜா சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சரோஜாவுக்கு மருத்துவர் கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்ததில் 88 சதவீதம் உடல் செயலிழந்து முடக்க நிலைக்கு சென்றார். இது குறித்து தனியார் மருத்துவமனை மீது சரோஜாவின் கணவர் தியாகராஜன் ஈரோடு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கவனக்குறைவு காரணமாகவே தனது மனைவி செயலிழக்க நேரிட்டதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, கவனக்குறைவான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட சரோஜாவுக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். 2 மாதத்துக்குள் மருத்துவமனை நிர்வாகமும், சிகிச்சை அளித்த மருத்துவரும் அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.


Tags : Female, negligence, treatment, Rs. 19 lakh fine
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...