மாலத்தீவில் தஞ்சமடைந்த கோத்தபய ராஜபக்சேவை வெளியேற்றக்கோரி மாலத்தீவு அதிபர் அலுவலகம் முன்பு போராட்டம்

மாலத்தீவு: மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சேவை வெளியேற்றக்கோரி மலாத்தீவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டிலிருந்து வெளியேறுமாறு மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் தகவல் தெரிவித்தார். மாலத்தீவில், கோத்தபய ராஜபக்சேவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்ககூடாது என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். இலங்கையில் மக்கள் முன்னெடுத்துள்ள கோரிக்கைக்கு மாலத்தீவு மக்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்றும், மாலத்தீவை விட்டு வெளியேறுமாறும் அரசாங்கத்திடம் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் சீரழிந்ததால் ஆவேசம் கொண்ட போராட்டக்காரர்கள் கடந்த சனிக்கிழமை அதிபர் மாளிகையை கைபற்றினர். பிரதமர் ரணிலின் வீடும் தீக்கரையாக்கப்பட்டது. முன்னதாக தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே இன்றைய தினம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அத்துடன் ராஜினாமா கடிதத்திலும் கையெழுத்திட்டார். இதனையடுத்து பொதுமக்களால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருதி, இலங்கையைவிட்டே தப்பி ஓட கோத்தபய முடிவு செய்தார். அவரது இளைய சகோதரர் பசில் அமெரிக்கா செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு வந்த போது, மக்களின் எதிர்ப்பால் பயணம் தடைபட்டது.

இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே துபாய்க்கு பயணிக்க அதே விமான நிலையம் வந்துள்ளார்.  ஆனால் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் செல்லும் வழியில் போகுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வழியாகச் சென்றால் மக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சி காத்திருந்த கோத்தபய உள்ளிட்டோர் 4 விமானங்களை தவறவிட்டனர். இந்தியாவுக்கு ராணுவ விமானம் மூலம் பயணிக்க அனுமதி கிடைக்காத நிலையில், கோத்தபய கடல் வழியாக மீண்டும் கடற்படை தளத்திற்கு அவர் சென்றார்.

இந்நிலையில் இன்று அதிகாலை கோத்தபய ராஜபக்சே, ஒருவழியாக இலங்கையைவிட்டு விமான படை விமானத்தில் மாலத்தீவு நாட்டுக்குள் அகதியாக தஞ்சமடைந்தார். மாலத்தீவு சபாநாயகரும் முன்னாள் அதிபருமான நஷீத், கோத்தபயவை தமது வாகனத்தில் அழைத்துச் சென்றார். இலங்கையைவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி தப்பி ஓடியது இதுவே முதல் முறையாகும். இலங்கையைவிட்டு கோத்தபய தப்பி ஓடிவிட்டதை இலங்கை விமானப் படை, பிரதமர் அலுவலகம் உறுதி செய்தது. இதன் முதல் கட்டமாக, சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம், இந்த தகவல்களை டிவிட்டரில் பதிவு செய்தார்.

இதனிடையே கோத்தபய ராஜபக்சேவுக்கு அகதியாக பாதுகாப்பு வழங்கக்கூடாது என மாலத்தீவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இலங்கை மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கோத்தபய ராஜபக்சேவை மாலத்தீவை விட்டே வெளியேற்ற வேண்டும்; மாலத்தீவு- இலங்கை இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: