×

ஊட்டியில் தொடர் மழை எதிரொலி தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளை பாதுகாக்க நடவடிக்கை-தொட்டிகள் மாடங்களுக்கு மாற்றம்

ஊட்டி :  ஊட்டியில் நாள் தோறும் மழை பெய்து வரும் நிலையில், தாவரவியல் பூங்கா மலர் செடிகள் பாதிக்காமல் இருக்க மலர் தொட்டிகள் மாடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரு சீசன்கள் கடை பிடிக்கப்படுகிறது. கோடை காலமான ஏப்ரல் மற்றும் ேம மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இச்சமயங்களில் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக பூங்காவில் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு, அந்த மலர் தொட்டிகள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.

அதேபோல், இரண்டாம் சீசன் செப்டம்பர் மற்றும் அக்ேடாபர் மாதங்களில் கடை பிடிக்கப்படுகிறது. இச்சமயங்களில் முதல் சீசன் போன்று அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வரவில்லை என்ற போதுதிலும், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதற்காக, பூங்கா முழுவதிலும் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படுகிறது. அதேபோல், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மாடங்களில் வைக்கப்படும். தற்போது முதல் சீசன் முடிந்த நிலையில், இரண்டாம் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தற்போது பூங்காவில் விதைப்பு பணிகள் நடந்து வருகிறது. அதேபோல், சால்வியா, டெய்சி உள்ளிட்ட பல்வேறு செடிகள் கட்டிங் செய்யப்பட்டு தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன.
 இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நாள் தோறும் பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டியில் நாள் தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், பூங்காவில் உள்ள டெய்சி, சால்வியா உட்பட பல்வேறு மலர் செடிகள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மழையில் இருந்து மலர் செடிகளை பாதுகாக்க தற்போது டெய்சி, சால்வியா போன்ற மலர் செடிகள் உள்ள தொட்டிகள் மாடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அந்த செடிகளை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Ooty: As it rains every day in Ooty, the flower pots of the botanical garden have been moved to the roofs so that the flower plants are not affected.
× RELATED ஒசூர் அருகே தளியில் நேற்று முன்தினம் நடந்த ரவுடி கொலை தொடர்பாக 4 பேர் கைது!