அதிமுக பொதுக்குழு முடிவு, தீர்மானங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தார் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம்..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு முடிவு, தீர்மானங்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று சி.வி.சண்முகம் விவரங்களை அளித்தார். சென்னையில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வரும் 17ம் தேதி எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு முடிவு, தீர்மானங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் சி.வி.சண்முகம்  தந்தார். இ - மெயில் மூலம் ஏற்கனவே அனுப்பிய நிலையில் சிவி சண்முகம் தீர்மானங்களை நேரில் அளித்தார். அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் அன்றைய தினமே தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

பொதுக்குழு தீர்மானங்கள், சட்டத் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கட்சி பிரச்சனையில் தங்களுக்கு என்ன வேலை என உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. பொன்னையன் ஆடியோ குறித்து கருத்து சொல்ல விருப்பமில்லை. இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதற்கு 2.428 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

Related Stories: