×

அந்தரத்தில் நிலைநிறுத்துவது, பேரிடர் காலத்தில் மீட்பு குன்னூரில் விமானப்படை அதிகாரிகளுக்கு எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரில் பைலட் பயிற்சி-சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

குன்னூர் : குன்னூர் ஜிம்கானா மைதானத்தில் விமானப்படை அதிகாரிகளுக்கு எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரில் பைலட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஜிம்கானா மைதானம் உள்ளது. ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த பகுதியில் விமானப்படை அதிகாரிகளுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரில் பைலட்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. காலை முதல் மதியம் வரை இந்த பயிற்சி நடந்தது.

ஹெலிகாப்டரை தரையில் இருந்து உயர்த்தி செல்லும் பயிற்சி, பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் விதத்தில், அந்தரத்தில் சிறிது நேரம் ஹெலிகாப்டரை நிலைநிறுத்துவது மற்றும் உயரத்தில் பறந்து தரையிறக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் பைலட்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி காரணமாக 20-க்கும் மேற்பட்ட முறை வானில் ஹெலிகாப்டர் பறந்து சென்றது. இதனால் ஹெலிகாப்டரை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்ததுடன் புகைப்படங்களும் எடுத்தனர்.

Tags : Antaram , Coonoor: Air force officers were given pilot training in Mi 17 helicopter at Coonoor gymkhana ground.
× RELATED சூரிய பகவான் வணங்கிய தலங்கள்