×

மக்கள் பணியாற்ற உழைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணம் பெற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வாழ்த்து..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம்பெற அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:


மக்கள் பணியாற்ற உழைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றுக்கு உள்ளானது வருத்தமளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி:

கொரோனா தொற்றிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். முதலமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்து கவலை அடைந்தேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விரைவில் பூரண உடல் நலம் பெற என் பிரார்த்தனைகள் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

டிடிவி தினகரன்:

கொரோனா தொற்றின் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணிகளைத் தொடர வாழ்த்துகிறேன் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

சீமான்

மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் நோய்த்தொற்றிலிருந்து விரைந்து குணமாகி, முழுஉடல்நலத்தோடு பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் பெருவிருப்பத்தை தெரிவிக்கிறேன் என்று சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Governor ,RN.Ravi ,P.Chidambaram , People's work, Chief Minister M.K. Stalin, Corona, greetings from leaders
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து