×

மானாமதுரை அருகே 12 ஆண்டுகளுக்குப் பிறகு புரவி எடுப்பு விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழாவில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். தஞ்சாக்கூர் கிராமத்தில் உள்ள காவேரி ஐயனார் சமையக்கருப்பண்ண சுவாமி கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா நடைபெறுவது வழக்கம். இதில் ஆலடிநத்தம், முகவூர், புளவர்சேரி ஆகிய  கிராம மக்களும் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு விழாவில் 21 குதிரை பொம்மைகளை திருமணமாகாத இளைஞர்கள் நேர்த்திக்கடனாக சுமந்து வந்து கொடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கானப்பேட்டையில் பூமீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆணி பிரம்மோற்சவத் திருவிழாவை முன்னிட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு 5 தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது. முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட முதல் தேரில் விநாயகரும், இரண்டாம் தேரில் முருகனும், மூன்றாவதில் பூமீஸ்வர ஸ்வாமியும், பிரம்ம வித்யாம்பாளும், நான்காவதில் அம்பாளும், ஐந்தாவது தேரில்  சண்டிகேஸ்வரர் வீற்றிருக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். குழந்தைகளுக்கு கல்வி அறிவு, ஆரோக்கியம் வேண்டி தேர் காலில் படுக்கவைத்து பக்தர்கள் நேர்த்தி கடன்செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே உள்ள பாகனேரியில் புல்வநாயாகி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. நடுமாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இன்று பெரிய மாடு மற்றும் சிறிய மாடு பிரிவுகளில் பந்தயங்கள் நடைபெற உள்ளன. கள்ளக்குறிச்சியில் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு சனிபகவானுக்கு முத்து அளித்து விரட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தீப்பந்தங்களை ஏந்தியவாறு சனிபகவன் அழைத்து வரப்பட்டு முத்துமாரியம்மன் சனிபகவானுக்கு முத்து அளித்து விரட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அர்த்தநாதீஸ்வரர் கோவிலில் 10ம் நாள் திருவிழாவில் பட்டாசு வெடிக்கும் போது தீப்பொறி பட்டதில் கோவில் முன்பு போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் தீப்பிடித்து எரிந்தது. அங்கு தயாராக இருந்த தீயணைப்பு படையினர் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பந்தலை தவிர மற்ற எந்த சேதமும் ஏற்படவில்லை. தீயணைப்பு படை வீரர்கள் உடனே தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.                      


Tags : Manamadurai , Manamadurai, 12 years, Puravi picking ceremony
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...