×

பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் சதுரகிரி கோயிலுக்கு குவியும் பக்தர்கள்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகின்றது. இந்நிலையில், ஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு, கடந்த 11ம் தேதி முதல் நாளை வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று பௌர்ணமி என்பதால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயில் அடிவாரத்தில் குவிந்தனர். தற்போது மீண்டும் கொரோனா பரவ துவங்கியுள்ள நிலையில், மாஸ்க் அணிந்தவர்கள் மட்டுமே சதுரகிரி கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு கொண்டு செல்வதாக ஒருசில தகவல்கள் கிடைத்த நிலையில், அதனை தடுக்க வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் யாரேனும் போதை பொருட்கள் வைத்திருந்தால், அதனை பறிமுதல் செய்து தகுந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வனவிலங்குகள் பக்தர்கள் கொண்டும் செல்லும் பாலிதீன் பைகளை உட்கொள்வதாலும், ஒன்றிய அரசு பாலிதீன் பைகளுக்கு தடை விதித்துள்ளதாலும், மலைகளுக்கு வரும் பக்தர்களின் பைகளில் உள்ள பாலிதீன் பைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தும் வருகின்றனர்.       


Tags : Virudunagar Sathuragiri Temple ,Pournami , Pournami, Virudhunagar, Chathuragiri Temple, Devotees
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை...