×

இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே வெளிநாடு தப்ப முயற்சி: தடுத்து நிறுத்திய குடியுரிமை அதிகாரிகள் விமான பயணிகள் எதிர்ப்பாலும் திகைப்பு

கொழும்பு: இலங்கையின் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவின் பயண ஆவணங்களை சரி பார்க்க விமான நிலைய குடியுரிமை துறை அதிகாரிகள் மறுத்ததால், அவர் வெளிநாடு தப்பும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
இலங்கையின் கடந்த 75 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் கடும் நிதி, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் போராட்டம் வெடித்தது.ளது. இதனால், பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரரும் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சே, மகிந்தவின் மகன் நிமல் ராஜபக்சே உள்பட ராஜபக்சே குடும்பத்தினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், அதிபர் கோத்தபய தொடர்ந்து செயல்பட்டார். அவரும் பதவி விலக வலியுறுத்தி மக்கள் கடந்த சனிக்கிழமை மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபர் கோத்தபய வசித்து வந்த அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்ததனர். இதனால், பதறிப்போன கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு ரகசிய பாதாள அறை வழியாக குடும்பத்துடன் தப்பினார். அண்டை நாடு ஒன்றுக்கு குடும்பத்துடன் கோத்தபய தப்பிச் சென்று விட்டதாக சபாநாயகர் அபே குணவர்த்தன தெரிவித்தார்.  இந்நிலையில், இலங்கை முன்னாள் நிதி அமைச்சரும், கோத்தபய, மகிந்தவின் சகோதரருமான பசில் ராஜபக்சேவும் அமெரிக்கா தப்பி செல்ல முயன்றுள்ளார். இதற்காக கட்டுநாயக்க விமானநிலையம் சென்ற அவரின் ஆவணங்களை சரிபார்க்க விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.  மேலும், எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளும் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் செய்தறியாமல் திகைத்து போன பசில் ராஜபக்சே, மீண்டும் கொழும்பு திரும்பினார். அவர் வெளிநாடு தப்பி செல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

* ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் கோத்தபய
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, தான் ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரசிங்கேயிடம் கூறியபடி, 13ம் தேதியிட்ட தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டு மூத்த அரசு அதிகாரியிடம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அக்கடிதத்தை இன்று சபாநாயகர் அபே குணவர்த்தவிடம் ஒப்படைக்க உள்ளார். வரும் 20ம் தேதி அடுத்த புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டு, சபாநாயகர் அபே குணவர்த்தன பொறுப்பு அதிபராக பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வெளிநாடு செல்ல தடை உச்ச நீதிமன்றத்தில் மனு
 நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி ராஜபக்சே குடும்பத்தினரும், முக்கிய தலைவர்களும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதற்கு, இடைக்காலத் தடை விதிக்கும்படி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* கோத்தபயவுக்கு விசா: அமெரிக்கா மறுப்பு
அதிபர் கோத்தபய இன்று பதவி விலக உள்ள நிலையில், அமெரிக்காவுக்கு தப்புவதற்காக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா கோரி விண்ணப்பித்துள்ளார். இலங்கையின் அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, அவருக்கு விசா வழங்க தூதரகம் மறுத்து விட்டதாக தூதரக அதிகாரிகள் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்க குடியுரிமையை வைத்திருந்த கோத்தபய, அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இரட்டை குடியுரிமையில் தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா மீண்டும் 44 ஆயிரம் டன் யூரியா உதவி
இலங்கைக்கு கடந்த ஞாயிறு அன்று கடன் உதவி திட்டத்தின் கீழ் 44,000 டன் யூரியாவை இந்தியா அனுப்பி வைத்தது. இதைத் தொடர்ந்து, உர தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீண்டும் 44,000 டன் யூரியாவை அனுப்புவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Tags : finance minister ,Basil Rajapaksa , Former Sri Lankan finance minister Basil Rajapaksa's attempt to escape abroad: Citizenship officials who stopped him were stunned by the protest of air passengers
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...