
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பண்டிகைகளை முன்னிட்டு பம்பர் லாட்டரி பரிசு அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்த 3 வருடங்களாக ஓணம் பம்பர் முதல் பரிசு ரூ. 12 கோடியாக இருந்தது. இந்நிலையில், இந்த வருடம் பரிசுத்தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2வது பரிசாக ரூ.5 கோடியும், மூன்றாவது பரிசாக 10 பேருக்கு ரூ.1 கோடியும் கிடைக்கும். டிக்கெட் விலை ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. முதல் பரிசு விழுபவர்களுக்கு 10 சதவீதம் ஏஜென்ட் கமிஷன் மற்றும் 30 சதவீதம் வரி நீங்கலாக ரூ.15.5 கோடி கிடைக்கும்.