×

நடிகர் ராமராஜ் உடல் தகனம்

ராமநாதபுரம்: நடிகர் ராமராஜ் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரு கிலுள்ள மேலச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், நடிகர் ராமராஜ் (72). முதுகுளத்தூரிலுள்ள ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அவர், 2011ல் பாலா இயக்கிய ‘அவன்-இவன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். பிறகு ‘வீரம்’, ‘தாரை தப்பட்டை’, ‘ராவண கூட்டம்’, ‘காரி’ உள்பட பல படங்களில் நடித்துள்ள அவர், டிவி தொடரிலும் நடித்தார். கடந்த 3 மாதங்களாக உடல்நலக்குறைவு கார ணமாக மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமராஜ், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடல் மேலச்சாக்குளத்தில் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. மறைந்த ராமராஜூக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் இருக்கின்றனர்.

Tags : Ramaraj , Actor Ramaraj cremated
× RELATED கடமலை அருகே கிணறு பைப்லைனை சேதப்படுத்திய யானைகள்