பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான்

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்ற ‘சூரரைப்போற்று’ படத்தில், அக்‌ஷய் குமார் உடன் இணைந்து சிறப்பு வேடம் ஒன்றிலும் நடித்து வருகிறார் சூர்யா. இந்நிலையில் ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பாலா இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்துக்கு ‘வணங்கான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. சூர்யா நடிக்கும் 41வது படமான இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ஹீரோயினாக கிரித்தி  ஷெட்டி நடிக்கிறார். சூர்யா கூறும் போது, ‘பாலாவுடன் மீண்டும் இணைந்ததில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி’ என்றார்.

Related Stories: