முதல்வர் மு.க.ஸ்டாலின் குணமடைய தலைவர்கள் வாழ்த்து

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அறிந்தேன். அவர் விரைவில் பூர்ண குணமடைந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை வேண்டுகிறேன்’ என கூறியுள்ளார். இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவில், கொரோனா தொற்றின் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைந்து மக்கள் பணியை தொடர வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.

Related Stories: