×

அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பில் தமிழகம் முன்னோடி மாநிலம்: எர்ணாவூர் நாராயணன் பேச்சு

சென்னை: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கி அவர்களின் நலன் காப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என எர்ணாவூர் நாராயணன் பேசினார். தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தற்போது 10,848 தொழிலாளர்கள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் 5வது கூட்டம் தொழிலாளர் ஆணையரகத்தில் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் நாராயணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அரசு தரப்பு பிரதிநிதிகள், தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் வேலையளிப்போர் தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக அலுவலர், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தினர் கலந்து கொண்டனர்.

பின்னர், தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் கலைஞரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வாரியத்தினை திறம்பட செயல்படுத்தி அனைத்து பனை மர தொழிலாளர்களையும் உறுப்பினராக்கி அவர்கள் அனைத்து நலத்திட்டங்களின் பயன்களையும் பெற வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லெண்ணத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இதற்காக அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கி அவர்களின் நலன் காப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. பனைமர தொழிலாளர்கள் நலவாரியத்தை புனரமைத்து வாரிய தலைவர் நியமனம் மற்றும் பிரதிநிதிகள் நியமனம் செய்ததற்கு முதல்வருக்கு நன்றி. இவ்வாறு பேசினார்.

Tags : Tamil Nadu ,Ernavur Narayanan , Tamil Nadu is a pioneer state in social protection of unorganized workers: Ernavur Narayanan speech
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...