பெரியபாளையம் அருகே கட்டிட தொழிலாளர் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம்

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே ஆரணியில் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. தமிழக கட்டிட தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ேநற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் வரதன் தலைமை வகித்தார். கிளை தலைவர் ரங்கநாதன், கிளை பொருளாளர் ஜெயராமன், சோழவரம் ஒன்றிய பொருளாளர் நாகராஜ், முனுசாமி, அருள், சொக்கலிங்கம், ராஜேந்திரன், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமான நலவாரிய தலைவர் பொன்குமார் கலந்துகொண்டு புதிய மாவட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது, `சங்கத்தின் வளர்ச்சிக்காக அனைத்து தரப்பு நிர்வாகிகள் அயராமல் பாடுபட வேண்டும். சங்கத்தின் நன்மைகளை குறித்து எடுத்துக்கூறி புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு நம் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் உறுதுணையாக நின்று நல திட்டங்களை பெற்றுத் தர வேண்டும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நல்ல முறையில் செயல்பட வேண்டும்’ என பேசினார். பின்னர் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். இதில் ஆரணி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக அனைவரையும் அமைப்பு சாரா மாவட்ட தலைவர் குமரேசன் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் பார்த்தசாரதி, பத்மநாபன், கோபி, லோகநாதன், ஏழுமலை, சிவாஜி, ரங்கன், சம்பத், நாகராஜ், சொக்கலிங்கம், ரோஜா, மோகனா, நாகராணி, ஜெரினா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முருகன் நன்றி கூறினார்.

Related Stories: