புழல் பகுதியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல்: புழல் பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப்பள்ளி, கண்ணப்பசாமி நகர் உயர்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி, காந்தி பிரதான சாலையில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் சுமார் 3500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் புழல் பகுதியில் பெண்களுக்காக தனியாக அரசு பள்ளி இல்லாததால், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள செங்குன்றம் அரசு பள்ளிக்கும் 6 கி.மீ. தூரம் உள்ள வடகரை அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கும் பெண்கள் சென்று படித்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு பல்வேறு சிரமம் ஏற்படுகிறது. இதனால் புழல் பகுதியில் மாணவிகளுக்கு தனியாக ஒரு அரசு பள்ளி உருவாக்கவேண்டும் என்று கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்தனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை. எனவே, வரும் கல்வியாண்டில் உரிய நடவடிக்கை எடுத்து புழல் காந்தி பிரதான சாலையில் இயங்கிவரும் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளியாக மாற்றி பெண்கள் மட்டுமே படிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: