×

கோவளத்தில் உள்ள புனித கார்மேல் மாதா ஆலயத்தில் கொடியேற்றம்: 16ம் தேதி தேர் பவனி

திருப்போரூர்: கோவளம் புனித கார்மேல் மாதா ஆலயத்தின் 214ம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது. இதன் முக்கிய விழாவான தேர் பவனி வரும் 16ம் தேதி நடக்கிறது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் பழமை வாய்ந்த புனித கார்மேல் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் தேர் பவனி விழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த விழா நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு தேர் பவனி விழா இன்று மயிலை மறை மாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து, 14ம் தேதி அன்பியப் பெருவிழாவும், 15ம் தேதி நற்கருணை பெருவிழாவும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி வருகின்ற 16ம் தேதி மாலை 6 மணிக்கும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் கலந்து கொள்கிறார். மறுநாள் 17ம் தேதி கொடியிறக்கபட்டு விழா நிறைவடைகிறது. இந்த விழாவின் ஏற்பாடுகளை கோவளம் கார்மேல் மாதா ஆலய அதிபர் அமலோற்பவராஜ் உள்பட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Tags : St. Carmel Matha Shrine ,Kovalam , Flag Hoisting at St. Carmel Matha Shrine in Kovalam: 16th Ther Bhavani
× RELATED கோவளத்தில் இப்தார் நோன்பு திறப்பு