×

காஞ்சிபுரம் 36வது வார்டு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மநாகராட்சி 36வது வார்டு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுப்பராயன் வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது, தேர்தல் பிரசாரம் செய்தநிலையில் மாநகராட்சி 36வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் திடீரென மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டநிலையில், இந்த வார்டுக்கான கடந்த 9ம் தேதி தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் சுதா (எ) சுப்பராயன், பாமக சார்பில் கன்னிவேல், அதிமுக சார்பில் வேணுகோபால் சுயேச்சையாக, அமுமுக சார்பில் சீனிவாசன், நாம் தமிழர் சார்பில் சத்தியமுர்த்தி, சுரேஷ் (சுயே) என மொத்தம் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்குபதிவு தியாகி நடுநிலை பள்ளியில் கடந்த 9ம் தேதி நடைபெற்றது.

இந்த வார்டில், ஆண் வாக்காளர் 2154, பெண் வாக்காளர்கள் 2356 என மொத்த 4510 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 2597 வாக்குகள் பதிவாகின. அதாவது 57.58 சதவீதம் பதிவாகியது. இதற்கான வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் அண்ண அரங்கத்தில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அப்போது, 1,2,3 சுற்றுகளில் திமுக வேட்பாளர் சுதா என்கின்ற சுப்பராயன் முன்னிலை வகித்தார். அதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வார்டு திமுக வேட்பாளர் சுப்புராயன், 4வது சுற்றில் 1759 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் உட்கட்சி மோதலால், இரட்டை இலை சின்னம் இல்லாததால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட வேணுகோபால்  568 வாக்குகள் பெற்றார். அமமுக வேட்பாளர் சீனிவாசன் 78, நாம் தமிழர் சத்தியமூர்த்தி 37, பாமக வேட்பாளர் கன்னிவேல் 88 வாக்குகளை பெற்றனர். திமுக வெற்றி பெற்றதால், காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களின் பலம் 34 ஆக கூடியுள்ளது. அதிமுக 8, பாமக 2, பஜ 1, சுயேச்சைகள் 6 என மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ளனர்.

* மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி சாலை மறியல்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் 15வது வார்டு பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. அதன், வாக்கு எண்ணிக்கை, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், அதிமுக சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட யோகசுந்தரி, 1433 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் சுதா தனியரசு 1430 வாக்குகள் பெற்றார். அதனால், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிநது விரைந்து வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : DMK ,Kanchipuram , DMK candidate wins Kanchipuram 36th ward by-election
× RELATED மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில்...