×

எஸ்.பி.வேலுமணி, தங்கமணி திருட்டு பசங்க; பணத்தையும், கான்ட்ரக்ட்டையும் கொடுத்து 42 எம்எல்ஏக்களை கையில் வைத்துள்ளனர்; பொன்னையன் ஆடியோ வைரல்

சென்னை: எஸ்.பி.வேலுமணி, தங்கமணி இருவரும் திருட்டு பசங்க. அவர்கள் பணத்தையும், கான்ட்ரக்ட்டுகளையும்  ெகாடுத்து 42 எம்எல்ஏக்களை கையில்  வைத்துள்ளனர். எடப்பாடி கையில் 9 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று பொன்னையன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிமுக இரண்டாக உடைந்துள்ளன. எடப்பாடி பழனிச்சாமி, தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேநேரத்தில், அதிமுகவில் தான், ஒருங்கிணைப்பாளராக தொடருவதாக பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இரு அணியினரும் கலவரத்தில் ஈடுபட்டதால் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள முன்னாள் நிதி அமைச்சர் பொன்னையன், அதிமுக பிரமுகர் நாஞ்சில் கோலப்பனுடன் பேசிய ஆடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாஞ்சில் கோலப்பன்: அண்ணன், வணக்கம் கன்னியாகுமரியில் இருந்து நாஞ்சில் கோலப்பன் பேசுறேன் என்று கூறியதும், பொன்னையன் சொல்லுங்க நல்லா இருக்கீங்களா என்று கேட்கிறார்.  என்ன அண்ணா, கட்சி நிலவரம் இப்படி போகுது. அண்ணனை (ஓ.பன்னீர்செல்வத்தை) நீங்களே இப்படி பேசுகிறீங்களே. அண்ணே... தலைவர்கள் காலத்தில் இருந்து கஷ்டப்பட்டுடு இருக்கிறோம். தொண்டர்களை யாருமே பார்க்கவில்லையே அண்ணே... எல்லாருமே தலைவர்களை தான் பார்க்கின்றனர்.

பொன்னையன்: அதுதான் இந்த கோடீஸ்வரன் கையில் உள்ள கட்சி. அந்த கோடீஸ்வரன் கையில் போய் சேரப்போகுது, ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

கோலப்பன்: இன்றைக்கு தொண்டர்களை யாரும் நினைத்து பார்க்கவில்ைல. நீங்கள் டிவியில் பேட்டி கொடுத்ததை பார்த்தேன். கட்சி சேருமா, சேராதா என்று ஒன்றுமே புரியவில்லை.

ெபான்னையன்: தொண்டர்கள் இரட்ைட இலை பின்னால் தான் உள்ளனர். தலைவர்கள் பணத்துக்கு பின்னாடி நிற்கின்றனர். அவர்களுடைய பணத்தை பாதுகாப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு ஆடுகிறார்கள். தங்கமணி தன்னை காப்பாற்றிக் கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓடுகிறார். அதைமாதிரி கே.பி.முனுசாமியும், ஆளும் கட்சியை திட்டுவதை நிறுத்திவிட்டார்.

கோலப்பன்: பெட்ரோல் பங்கு வாங்கி இருக்கிறார் என்று கூறுகிறார்களே.

பொன்னையன்: குவாரி லைசன்ஸ் எக்ஸ்போர்டில் மாதத்திற்கு ரூ.2 கோடி சம்பாதிக்கிறார். கொள்ளையடித்த கோடீஸ்வரன், பணத்தை பாதுகாப்பதற்காக இப்படி ஆடுகிறார்கள். தொண்டர்கள் தடுமாறுகிறார்கள்.

நாஞ்சில் கோலப்பன்: ஒரு பதவி கூட வாங்கவில்ைல, நாங்கள்லாம். தர்மயுத்தத்தின் போது கே.பி.முனுசாமி நிறைய சம்பாதித்து விட்டார். நல்ல வாழ்ந்து விட்டார். ஜெயலலிதா அவரை ஒதுக்கி வைத்திருந்தார்.

பொன்னையன்: கே.பி.முனுசாமி நக்சலைட்டாக இருந்தான். டிஜிபி தேவாரம் அவரை நக்சலைட்டுடன் தொடர்பில் இருப்பதாக கூறியதையடுத்து ஒதுக்கி வைத்தனர். தலைவரும் ஒதுக்கி வைத்திருந்தார்.

நாஞ்சில் கோலப்பன்: ஜெயலலிதாவிடம் பணிவுடன் வந்தார், சேர்த்தார்கள், பிறகு எம்பி தேர்தலுடன் ஒதுக்கி வைத்தார்கள். ஆவின் இடத்தில் ெபட்ரோல் பங்க் 20 வருடத்துக்கு கொடுத்திருக்கிறார்கள். எப்படி கொடுத்தார்கள்னு என்று தெரியவில்லை அண்ணே...

பொன்னையன்: எல்லாரும் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆளும் கட்சியின் தயவுக்காக திட்டுவது இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை தான் திட்டுறான். நம்ம ஆட்கள் அனைவரும் கோடி கோடியாய் சம்பாதித்து விட்டு ஈட்டியால் குத்துவார்கள் என்று அமைதியாக இருக்கிறார்கள். எடப்பாடி மட்டும் ஏதோ மம்தா பானர்ஜி போல் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை என்று கொஞ்சம் திட்டுகிறார். ஆனால் எடப்பாடி சம்மந்தி பெயரில் ஒரு வழக்கும் போடப்பட்டுள்ளது.

நாஞ்சில் கோலப்பன்: கட்சியை எப்படி நடத்துவார்கள் என்று தெரியில்லை, எங்களுடைய மாவட்டத்தில் பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டனர்.

பொன்னையன்: மாவட்ட செயலாளருக்கு பணம் கொடுக்க வேண்டியதில்லை, ஒவ்ெவாரு மாவட்ட செயலாளரும் குறைந்தது ரூ.100 கோடிக்கு குறைந்தது வைத்திருப்பவர்கள். முன்பு 1.50 சதவீதம் தான், இப்போது ரூ.14 சதவீதம் கமிஷன் வாங்கி ெகாண்டு ஏதோ வேண்டியவர்களுக்கு பிரித்து கொடுக்கிறார்கள். தலைமை கழகத்திற்கு கொடுக்க வேண்டியதில்லை. எடப்பாடி பக்கம் போனால் தான் பணத்தை பாதுகாக்க முடியும்.

கோலப்பன்: எங்களுடைய மாவட்டத்தில் கட்சிக்கு முக்கியமானவர்கள் யாரும் இல்லை. தளவாய் சுந்தரம் தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்துக் கொண்டார்.

பொன்னையன்: இந்தியாவில் தளவாய் சுந்தரம் தான் மிகப்பெரிய புரோக்கர்.

கோலப்பன்: தளவாய் சுந்தரம் தான் ஒற்றை தலைமை வேண்டும் என்று முதன்முதலில் பேட்டிக் ெகாடுத்தார்.

பொன்னையன்: ஒன்றுமே பண்ணமுடியாது சார். பொதுக்குழு உறுப்பினர்கள் தான் கட்சியின் முடிவு என, தீர்மானத்தை நான் படிக்க போகிறேன். சி.வி.சண்முகம் நாய் மாதிரி சென்று ரத்து, ரத்து என்று கத்துறான். கே.பி.முனுசாமியும்சென்று ரத்து, ரத்து என்று கத்துறான். அதனாலதான் நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கினது. எடப்பாடி சரியாக இருந்தார். சமாதானப்படுத்தி விடலாம் என்று இருந்தார். ஆனால் எம்எல்ஏக்கள் அந்த அளவுக்கு இல்லை, மாவட்ட செயலாளர், எம்எல்ஏக்களை நான்கு வருடம் சம்பாதிக்க விட்டார் பாத்திங்களா? அவர் முதுகிலே குத்துவிட்டாங்க.  அதனால எடப்பாடி, அவர்கள் சொல்வதற்க்கெல்லாம் சரி என்று கூறுகிறார். சி.வி.சண்முகம் என்னுடைய பையனை விட 4 வயது குறைவு.

அவனுடைய அப்பாவும், நானும் சட்டக்கல்லூரியில ஒன்றாக படித்தவர்கள். பகலிலே குடித்துக் கொண்டு இருப்பான். அப்புறம் அவன் கையில் படையாச்சியர், வன்னியர் 19 எம்எல்ஏக்கள் அவன் கையில் உள்ளனர். சாதி அடிப்படையில் எம்எல்ஏக்கள் உள்ளதால் அவனை பிடித்து தொங்குகிறான். கொங்குவோளாளர் கவுண்டர் சமூகத்தில் 42 எம்எல்ஏக்கள் 6 மாவட்டத்தில் உள்ளனர். அதில் 9 பேர் தான் எடப்பாடி கையில் உள்ளனர். மீதமுள்ளவர்களை எஸ்.பி.வேலுமணி, தங்கமணி பணத்தையும், கான்ட்ரக்ட் பணிகளையும் ெகாடுத்து கையில் வைத்துள்ளனர்.

இரண்டு பேரும் திருட்டு பசங்க... எடப்பாடிக்கு வேறு வழியில்லை. எடப்பாடிக்கு, முதல்வர் பதவி வேண்டும் என்று ேக.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி என எல்லாரும் கையில் சிக்கிக் கொண்டு ஒன்றும் பண்ண முடியாமல் தவிக்கிறார். கே.பி.முனுசாமி கூட நாளைக்கு ஒற்றை தலைமைக்கு வரலாம். சாதி அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி பதவியை பாதுகாத்தால் போதும் என்ற அடிப்படையில் முட்டாள் தனமாக ஓடிக் கொண்டு இருக்கிறார். யாருமே கட்சிக்கும், ஜெயலலிதாவுக்கும், எம்ஜிஆருக்கும் விசுவாசமாக இல்லை. இவ்வாறு பொன்னையன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

Tags : S. P. Velumani ,Thangamani ,Thittu Basanga ,Ponnaiyan Audio Viral , S. P. Velumani, Thangamani Thittu Basanga; 42 MLAs have been given money and contract; Ponnaiyan Audio Viral
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை