தாம்பரம்-விழுப்புரம் இடையே 2 ரயில் கூடுதலாக இயக்கப்படும்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம்- விழுப்புரம் இடையே தினசரி அதிக பயணிகள் ரயில்களில் வந்துசெல்வதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி 2 மெமூ ரயில்கள் தினமும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

அதன்படி தாம்பரம்-விழுப்புரம் இடையே மெமூ ரயில் (06027) வரும் 16ம் தேதி முதல் தினசரி கூடுதலாகவும், விழுப்புரம்- தாம்பரம் இடையே மெமூ ரயில் (06028) வரும் 17ம் தேதி தினமும் கூடுதலாக இயக்கப்படும்.

Related Stories: