×

சிந்து, பலுசிஸ்தானில் பேய் மழை: பாக். வெள்ளத்தில் சிக்கி 150 பேர் பலி; ஆப்கான் அணை இடிந்து விழும் அபாயம்

கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி மற்றும் பலுசிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 150 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணம், பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. நேற்று மட்டும் 68 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் 11 பேரும், பலுசிஸ்தான் மாகாணத்தில் 49 பேரும், வடக்கு கில்கிட் பல்டிஸ்தானில் 10 பேரும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 17 பேரும் என மொத்தம் 150 பேர் பலியாகினர்.

கராச்சியில் மட்டும் மின்சாரம் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்ததாகவும், சுவரில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலுசிஸ்தானில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள கடனி அணை இடிந்துவிழும் அபாயமும் உள்ளது. இதற்கிடையில், ஜூலை 18 மற்றும் 19ம் தேதிகளில் கராச்சி மற்றும் சிந்துவின் பிற பகுதிகளில் இடியுடன் கூடிய மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Sindh ,Balochistan , Indus, Balochistan, ghost rain, Pakistan, Afghan dam, danger
× RELATED சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு...