×

நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அபார வெற்றி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அப்போது, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட 36வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் திடீரென மரணமடைந்தார். இதனால் 36வது வார்டு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வார்டுக்கான தேர்தல் கடந்த 9ம்தேதி தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் சுதா (எ) சுப்புராயன், பாமக சார்பில் கன்னிவேல், அதிமுக சார்பில் வேணுகோபால் சுயேச்சையாகவும், அமுமுக சார்பில் சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சத்தியமுர்த்தி, சுரேஷ் (சுயே) என 6 பேர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு காஞ்சிபுரத்தில் உள்ள தியாகி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

ஆண்கள் 2154 பேரும், பெண்கள் 2356 பேரும் என 4510 வாக்குகளில் 2597 ஓட்டுப்போட்டனர்.  57.58 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து 1, 2, 3 சுற்றுகளில் திமுக வேட்பாளர் சுதா என்ற சுப்புராயன் முன்னிலை வகித்தார். இதையடுத்து, திமுக வேட்பாளர் சுப்புராயன் 4 சுற்றுகளில் 1759 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட வேணுகோபால் 568 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களின் பலம் 34 ஆக கூடியுள்ளது. அதிமுக-8, பாமக-2, பாஜக-1, சுயேச்சைகள் 6 என 51 கவுன்சிலர்கள் உள்ளனர்.

பள்ளிப்பட்டு
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஊராட்சி 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, பாமக மற்றும் அம‌மு‌க உட்பட 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்‌. இதில் பதிவான வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலர் கென்னடி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திர பாபு ஆகியோர் மேற்பார்வையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் எஸ்.கே.சேகர் வெற்றிப்பெற்றார்‌. 1வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றிப்பெறுவது இதுவே முதல் முறையாகும்‌‌.

சோழவரம்
சென்னை சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி 8வது வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலில் மொத்தம் 991 வாக்குகள் பதிவானது. வாக்கு எண்ணிக்கை சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் செல்வன் 187 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். ஒன்றிய ஆணையாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலசேகரன் வெற்றிப்பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

பூந்தமல்லி
பூந்தமல்லி ஒன்றியம் அகரமேல் ஊராட்சி 3வது வார்டு வாக்கு எண்ணிக்கை பூந்தமல்லியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் 161 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுகவை சேர்ந்த மணிகண்டன் 48 வாக்குகள் பெற்றார்.

ஊத்துக்கோட்டை
பூண்டி ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சி தலைவராக இருந்த ஜெயராமன் இறந்தார். இதற்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9ம்தேதி நடந்தது. மொத்தம் 1329 வாக்குகள் பதிவானது. பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று காலை  வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. சுயேச்சையாக  போட்டியிட்ட பிரதீப் அசோக்குமார் 867 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

Tags : Kanjagar , Urban and rural local body by-elections, DMK candidates, great success
× RELATED தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள்...