×

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது: வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: அதிமுகவில் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை தொண்டர்களால் ஒற்றை வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்களின் பதவி 5 ஆண்டுகாலப் பதவி. அதை பொதுக்குழுவால் நீக்க முடியாது. நேற்று நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பன்னீர்செல்வத்தை கட்டுப்படுத்தாது. அதை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், தற்பொழுதும் பன்னீர்செல்வம் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், பொருளாளராக இருக்கின்றார் என்றும் கூறி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் ஓபிஎஸ். ஜெயலலிதாவுக்குப் பிறகு பொதுச் செயலாளர் பதவியே கிடையாது என்பதால் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தன்னை முதலமைச்சர் ஆகிய சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்ததைப் போன்று நான்காண்டு காலம் தனக்கு உறுதுணையாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் கட்சி அலுவலகம் சென்றபோது எடப்பாடி ஆதரவாளர்கள் கல், கம்புகளை வீசினர். ரவுடிகளை 5 நாளாக அங்கு தங்க வைத்திருந்து அட்டூழியம் செய்தனர். எங்களை குறை சொல்ல அவர்களுக்குத் தகுதியில்லை என கூறியுள்ளார்.

Tags : General Assembly ,Vaithilingam , Any resolution passed in the General Assembly is void: Vaithilingam interview
× RELATED தேர்தல் பிரசாரத்திற்கு குறுகிய...