அரசுப் பணியில் இருக்கும்போது இறந்த அரசுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்

சென்னை: அரசுப் பணியில் இருக்கும்போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்களுக்கு உதவுவதற்காக அரசால், அரசாணை (நிலை) எண்.18 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை, நாள்.23.01.2020 இல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரிந்து பணியிடையே காலமான அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வேண்டி காத்திருப்போர் பட்டியலிலிருந்து முதுநிலை மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் 2021-22ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிட மதிப்பீட்டின் படி 6 இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு இன்று (12.07.2022) ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களால் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., பழங்குடியினர் நலத் துறை இயக்குநர் திரு. எஸ்.அண்ணாதுரை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு. சு.பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: