சென்னையில் உள்ள தனியார் மீன் ஏற்றுமதி நிறுவன கட்டடத்தை இடித்து அகற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் மீன் ஏற்றுமதி நிறுவன கட்டடத்தை இடித்து அகற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளின் படி அனுமதி பெறாததால் கட்டடங்களை அகற்ற உத்தரவிட்டது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக ரூ.20 லட்சம் அபராதம் செலுத்தவும் தனியார் நிறுவனத்திற்கு ஆணையிட்டது.   

Related Stories: