×

கோத்தகிரியில் பேரிக்காய் சீசன் துவக்கம்

கோத்தகிரி : கோத்தகிரியில் ஏழைகளின்‌ ஆப்பிள் என‌‌ அழைக்கப்படும் பேரிக்காய் சீசன் துவங்கியுள்ளது.கோத்தகிரி அதன்‌ சுற்றுவட்டார பகுதிகளான தாந்தநாடு, அனையட்டி, அரக்கம்மபை, கெட்டிக்கம்பை, ஒரசோலை ஆகிய பகுதிகளில் பேரிக்காய் சீசன் தற்போது துவங்கியுள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள மரங்களில் பேரிக்காய்கள் காய்க்கத் துவங்கியுள்ளன. விரைவில் அறுவடை செய்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு விவசாயிகள் அனுப்பி வைக்க உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ ஆப்பிளைவிட விலை குறைந்த பேரிக்காய், ஆப்பிளுக்கு நிகரான மகத்துவத்தைக் கொண்டுள்ளது என்கிறது மருத்துவ உலகம். பேரிக்காயை தோல் நீக்காமல் உண்ண வேண்டும். அதன் தோல் புற்றுநோய், இதய நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள கால்சியம், இரும்பு சத்துக்கள் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியமானது. பேரிக்காயில் உள்ள  நார்ச்சத்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. உடல் பருமனை குறைக்க பேரிக்காய் நல்லது.

இதில் அதிக அளவு வைட்டமின் `சி’ உள்ளது. கெட்ட கொழுப்பை அகற்றவும் இது பயன்படுகிறது. பேரிக்காய் உண்டால் எலும்புகள், பற்கள் உறுதியாகும். செரிமான உறுப்புகளை பலமாக்கும். பசியை தூண்டும் ஆற்றலும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் திறனும் பேரிக்காய்க்கு உண்டு.

கர்ப்பிணி பெண்கள் பேரிக்காய் உண்டால் கருவில் வளரும் குழந்தைக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது பால் ஊற வைக்கும். சிறுநீரக செயல்பாட்டுக்கும் பேரிக்காய் நல்லது. பேரியின் நார்ச்சத்து சர்க்கரை நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கல், குடல் புண் உள்ளிட்ட பல நோய்களைக் குணப்படுத்தும். புதிய செல்களை உருவாக்கவும், நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்தவும் பேரிக்காய் பயன்படுகிறது.

இப்படி பலவித ஆரோக்கியப் பலன்களை அளிக்கும் பேரிக்காயை இந்த சீசனில் வாங்கி உண்ணுங்கள். குறிப்பாக இரவு படுக்கைக்கு போகும் முன் உண்பது சிறப்பானது. மருத்துவ உலகம் கொண்டாடும் பேரிக்காயை தவறாமல் பயன்படுத்துங்கள், என்றனர்.

Tags : Kotagiri , Kotagiri: The season of pears known as poor man's apple has started in Kotagiri.
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்