×

ஓல்டு டிபிஒ., சந்திப்பு முதல் கலெக்டர் அலுவலகம் வரை நடைபாதையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை

ஊட்டி :  ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பழைய காவல் அலுவலக சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கான்கீரிட் நடைபாைதயை ஒட்டி ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் டம்ளர், தட்டு உள்ளிட்ட 19 வகையான ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பயன்படுத்துவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருவதுடன், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இருப்பினும் ஊட்டி சுற்றுலா நகரமாக விளங்க கூடிய நிலையில் அண்டை மாநிலங்களில் இருந்து வர கூடிய சுற்றுலா பயணிகள் வரும் போது பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் பொருட்களை எடுத்து வருகின்றனர். இவற்றை பயன்படுத்தி விட்டு பொது இடங்களில் வீசி சென்று விடுகின்றனர். இதனால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றன.

இதனிடையே ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பழைய காவல் அலுவலக சந்திப்பில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கான்கீரிட் நடைபாைதயை ஒட்டி ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. சுற்றுலா பயணிகள் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு உணவருந்தி விட்டு பிளாஸ்டிக் தட்டுகள், கன்டெய்னர்கள் உள்ளிட்ட குப்பைகளை வீசி எரிந்துள்ளனர். இதுதவிர தெர்மாகோல், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவைகள் குவிந்து காணப்படுகிறது. எனவே இவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



Tags : Old DPO , Ooty : Concrete on Ooty-Kudalur National Highway from Old Police Station Junction to Collector's Office
× RELATED பொறியியல் படிப்பு மாணவர்...