×

மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் செலுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மாவீரன் அழகு முத்துக்கோன்-உயிரைவிட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம். 18ம் நூற்றாண்டிலேயே விடுதலைக் கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலைச் சிதறக்கொடுத்து வரலாற்றில் நீங்கா இடமும்-மங்காப் புகழும் கொண்ட அரிமா நெஞ்சம் அவரது! கட்டாலங்குளத்துக் காவிய நாயகன் புகழ் வாழ்க.

Tags : Mahaveeran Akagu Muthukon ,Chief Minister ,M.K.Stalin , Mahaveeran Akagu Muthukon's birthday: Chief Minister M.K.Stalin's eulogy
× RELATED டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர்...