மதுராந்தகம் பகுதியில் வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றிய யாதவ சங்கம் மற்றும் இளைஞர் அணி அமைப்பு சார்பில் சுதந்திரப் போராட்ட  வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் குருபூஜை விழா நேற்று நடந்தது.  இந்த விழா, மதுராந்கதம் ஒன்றியத்தில் மாமண்டூர், கருங்குழி மற்றும் மதுராந்தகம் நகரம் ஆகிய பகுதிகளில் கொண்டாடப்பட்டது.

மேலும், மாமண்டூரிருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில், கருங்குழி பஸ் நிலையம் அருகே ஊர்வலமாக வந்தனர். பின்னர், வீரன் அழகுமுத்துக்கோன் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் நகரில் வீரன் அழகுமுத்துக்கோன் உருவபடத்தை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து, பேருந்து நிலையம் எதிரில்  அழகுமுத்துக்கோன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், ஒன்றிய நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், கண்ணப்பன், தயா சீனிவாசன், ரங்கநாதன் நாராயணன், பிரபாகரன் மற்றும் இளைஞர் அணியினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: