×

கடந்த 4 ஆண்டுகளில் தத்தெடுப்பு மையங்களில் 800 குழந்தைகள் மரணம்: ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு மனுக்களின் கேள்விக்கு ஒன்றிய தத்தெடுப்பு வள ஆதார மையம் அளித்துள்ள பதிலில், ‘கடந்த 2018ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் மாநில அரசுகளின் சிறப்பு தத்தெடுப்பு மையங்களில் சுமார் 819 குழந்தைகள் இறந்துள்ளன. இதில் பெரும்பாலானவை இரண்டு வயதுக்குட்பட்டவை. இதில் 481 பெண் குழந்தைகள் மற்றும் 129 குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள் ஆகும். 2018-2019ம் ஆண்டில் 251 குழந்தைகள் இறந்துள்ளன.

2019-2020ம் ஆண்டில் 281 குழந்தைகளும், 2020-2021ல் 169 குழந்தைகள் இறந்துள்ளன.  2021-2022ம் ஆண்டில் 118 குழந்தைகள் இறந்துள்ளன. இதில் 104 குழந்தைகள் இரண்டு வயதுக்குட்பட்டவை. பெரும்பாலான இறப்புக்கள் குழந்தைகள் பாதுகாப்பற்ற முறையில் கைவிடப்படுவதால் ஏற்படுகின்றன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.



Tags : 800 children die in adoption centers in last 4 years: shocking information in RTI
× RELATED ரயில் பயணிகளுக்கு இருக்கை கிடைப்பது...