×

ஐ2யூ2 முதல் மாநாடு நாளை தொடக்கம்: பைடன், மோடி பங்கேற்பு

புதுடெல்லி: இந்தியா, இஸ்ரேல், யுஏஇ, யுஎஸ் ஆகிய நாடுகளின் முதல் ஐ2யூ2 உச்சி மாநாடு வீடியோ கான்பரன்சில் நாளை நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளுடன் இணைந்து குவாட் அமைப்பிலும், அமெரிக்காவுடன் இணைந்து வெளியுறவு, பாதுகாப்பு துறைகளுக்கான 2+2 என்பது உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் இந்தியா உறுப்பு நாடாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் புதிய ஐ2யூ2 குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் உச்சி மாநாடு காணொலி மூலம் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரதமர் மோடி, அதிபர் பைடன், பிரதமர் நெப்தலாஇ பென்னட், அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதில், உக்ரைன் போரினால் உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள உணவு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் பிராந்திய, சர்வதேச அளவில் உறுப்பு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தடுக்க தேவையான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. மேலும், வர்த்தகம், முதலீடு குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Tags : I2U2 First Summit ,Biden ,Modi , First I2U2 Summit Begins Tomorrow: Biden, Modi Attend
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை