×

2 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம்: கட்சியை காப்பாற்ற காங்கிரஸ் நடவடிக்கை: கோவாவில் பரபரப்பு

பனாஜி: கோவாவில்  பாஜவுக்கு தாவ இருப்பதாக கருதப்படும் கட்சி எம்எல்ஏக்கள் 2 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. கோவாவில் பிரமோந்த் சாவந்த் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. அங்கு காங்கிரசுக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோவா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ மற்றும் முன்னாள் முதல்வர் திகாம்பர் காமத் ஆகியோர் தலைமையில் 6 எம்எல்ஏக்கள் பாஜவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர்கள் தலைமறைவானதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக எஞ்சிய 5 எம்எல்ஏக்களை ரகசியமான இடத்திற்கு காங்கிரஸ் கட்சி மாற்றியது.

இதனால் கட்சி உடைவதை தடுக்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து லோபோவை நீக்கிய காங்கிரஸ், அவரையும், திகம்பர் காமத்தையும் தகுதி நீக்கம் செய்ய கோவா சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ் தவாத்கரிடம் மனு அளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை பாஜ ஏற்கனவே கர்நாடகாவிலும், மத்தியப் பிரதேசத்திலும் செய்திருக்கிறது. கோவாவில் ஏற்கனவே காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்திருக்கிறது. தற்போது அவர்களின் வலிமையை பெருக்கிக் கொள்ளும் நோக்கில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கப் பார்க்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள முதல்வர் பிரமோத் சாவந்த், ‘‘தங்கள் ஆட்சிக்கு யாரும் தேவையில்லை. 25 எல்ஏக்களுடன் நிலையான ஆட்சி தற்போது இருக்கிறது. வேண்டும் என்றே மற்றவர்களை குறைகூறுவதையே காங்கிரஸ் கட்சி வாடிக்கையாக கொண்டிருக்கிறது’’ என்றார். இதற்கிடையே, தலைமறைவானதாக கூறப்பட்ட 6 எம்எல்ஏக்களும் நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.

Tags : Congress ,Goa , 2 MLAs disqualified: Congress moves to save party: Pandemonium in Goa
× RELATED பாபாசாகேப் அம்பேத்கரே வந்து...