×

பெருங்களூரில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பனைஓலை விரிந்த நிலையில் தடயங்கள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவையின் நிறுவுனர் புலவர். தமிழரசன், செயலாளரும், தொல்லியல் ஆர்வலருமான பெருங்களூர் மாரிமுத்து மற்றும் குழுவினர் இணைந்து பெருங்களூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் அமைந்துள்ள குறுக்கு வாரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இப்பகுதியில் ஏராளமான இரும்பு தாதுக்கள் கிடைக்கின்றபடியால் அவற்றை உருக்கி இரும்பாலானஆயுதங்களை தயாரித்துள்ளது தெரியவருகிறது. இப்படி தயாரிப்பதற்கு துளையிட்ட சுடுமண் குழாய்கள் மாவட்டத்தில் ஏராளமாக கிடைத்திருக்கிறது. தற்பொழுது குளிப்பதற்குஇப்பகுதியை பயன்படுத்தி வரும் மக்கள், முன்பு இப்பகுதியில்தண்ணீர் கிடைத்ததாலும், செம்புராங்கற்கள் நிறைந்த மேட்டுபகுதியாக இருந்ததாலும் சின்ன மோடு, பெரிய மோடு என மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் மக்கள் வசித்ததற்கான ஆதாரமாக கருதப்படுகிறது.

நாகரீகமடைந்த மனித இனம் இரும்பின் பயன்பாட்டை அறிந்து போர் கருவிகளை செய்வதற்கு இப்பகுதியில் இரும்பு உருக்காலைகளை நிறுவியிருக்கலாம். இப்பகுதி பெருங்கற்காலத்தை சேர்ந்த இரும்பு காலமாகவும் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முற்பட்டதாகவும் இருக்கலாம். மேலும்இரும்பை பிரித்தெடுத்து கருவிகளாக உருவாக்கியவர்களுக்கு வல்லத்திராக்கோட்டை அரையர்கள் வரிகள் வாங்கியதைதிருவரங்குளம் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இரும்பு தாதுக்களை உடைத்து பொடி செய்து அவற்றை ஊது உலையிலிட்டு, உருக்கி இரும்பை பிரித்தெடுத்திருக்கிறார்கள். இத்தாதுக்களை உருக்குவதற்கு அதிகளவு வெப்பம் தேவைப்படுவதால், தற்பொழுது கொல்லுப் பட்டறையில் காற்றை செலுத்தப் பயன்படுத்தப்படும் துருத்திபோன்ற அமைப்பால் ஊது உலையில் அதிக அழுத்தத்துடன் காற்றைச் செலுத்த சிறிய துளையிட்ட சுடுமண் குழாய்கள்பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இங்கு வட்ட வடிவமாக தாழிபோன்ற அமைப்புடன் உலைக்கலன்கள் புதைந்த நிலையில்கட்டுமானத்துடன் உள்ளது. இரும்பு உலையில் வாப்பாட்டு பகுதியான விளிம்பின் மேல் பகுதியில் இரும்பு தாதுக்கள் வழிந்தோடும் வகையில் வெளிவட்டத்திலும், உள்வட்டத்திலும் பள்ளமான அமைப்புடன் உருக்கு உலைக்கலன்கள் காணப்படுகின்றன. மேலும்“தென்பனங்காட்டு நாட்டு பெருங்கோளியூர்” எனப் இப்பகுதிகல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால் பனைமரங்கள் நிறைந்தஇவ்விடங்களில் எஞ்சிய இரும்பு கழிவுகளை கொட்டும்போதுபனைக்குருத்தின் மையப்பகுதியிலிருந்து ஓலை விரிந்த நிலையில் இரும்பு தாதுக்கள் அதன் மீது கொட்டப்பட்டுகுருத்தோலை விரிந்த நிலையில் அச்சு வார்ப்பாக செம்புராங் கற்களின் மீது படிந்துள்ளது.

2000 வருடங்களுக்கு முற்பட்ட இவ்வமைப்பு தற்போதுள்ள நவீன கருவிகளின் அச்சு வார்ப்புபோன்று அழகாகவும், பழமையான தொல்லியல் சான்றாகவும்ஆய்வாளர்களுக்கு உள்ளது.
இவ்விடத்திலிருந்து மேற்கே 1 கி.மீட்டர் தொலைவில்பெருங்கற்கால ஈமத் திட்டைகள் 6 மீட்டர் விட்டத்தில் வெள்ளை நிற பளிங்கு கற்கலால் உள்ளது. இவற்றின் காலம் (கிபி 200 -150) என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசும், தொல்லியல்துறையும் இப்பகுதியை தொடர்ந்து ஆய்வு செய்தால் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்குமென்றும், ஆகவே இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென்று இப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Perungalur , Pudukottai: Traces of an iron smelting factory have been found in Perungalur, Pudukottai district.
× RELATED ஓபிஎஸ்சுக்கு எதிராக போட்டியிட்ட 5...