×

பெரம்பலூர் அருகே பாளையத்தில் வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

பெரம்பலூர் : பெரம்பலூர்அருகே பாளையம் கிராமத்தில் வெறிநாய்கள் கடித்து 3ஆடுகள் பலியாயின. பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.பெரம்பலூர் தாலுகா, குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்டது பாளையம் கிராமம். இவ்வூரைச் சேர்ந்த 14வது வார்டு ஆறுமுகம் மகன் கந்தசாமி(54). விவசாயி. இவருக்கு ஊருக்கு மேற்கே மூலக்காடு செல்லும் வழியில் சொந்தமாக நிலமும், ஆண்டியான்குளத்தின் மே ற்குப் பகுதியில் தோட்டமும் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கந்தசாமி தனது ஆடுகளை மலையடி வாரத்தில் மேய்த்து விட்டு திரும்பிய பின்னர், தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு வீடு திரும்பி விட்டார். நேற்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது 3 ஆடுகளும் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்து பெரம்பலூர் எஸ்ஐ குணசேககரன், கிராம நிர்வாகஅலுவலர் கஜலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு கால்நடை மருத்துவருக்குத் தகவல் அளித்தனர்.

தொடர்ந்து குரும்பலூர் கால்நடை மருத்துவர் மூக்கன் நேரில் வந்து பிரேத பரிசோதனை செய்து வெறி நாய்கள் கடித்திருக்கலாம் எனக்கூறினார். தகவலறிந்து குரும்பலூர் பேரூராட்சித்தலைவர் சங்கீதா ரமேஷ், பாளையம் கவுன்சிலர்கள் ரம்யா சிவக்குமார், பெருமாள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு வெறிநாய்களை கூண்டு வைத்துப் பிடிக்கவும், பாதிக்கப்பட்ட கந்தசாமிக்கு இழப்பீடு பெற்றுத்தரவும் பரிந்துரை செய்தனர்.

ஏற்கனவே கந்தசாமியின் பசு மாடு ஒன்றை இதே போல் வெறிநாய்கள் கடித்துக் குதறியதால் பசுமாடு பலியான நிலையில் தற்போது வெள்ளாடுகளும் பலியானதால் பாளையம் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கந்தசாமியின் ஒரு ஆண் ஆடும், 2பெண் ஆடுகளில் ஒன்று சில நாளில் குட்டிகளை ஈனும் நிலையில் இரு ந்ததால் ரூ50ஆயிரத்திற்கு ம் மேலாக இழப்பு ஏற்பட்டு ள்ளதாகக் கூறி கதறி அழுதார்.

Tags : Palayam ,Perambalur , Perambalur: 3 goats died after being bitten by rabid dogs in Palayam village near Perambalur. The public is scared.
× RELATED குடியிருப்பு பகுதியில் யானைகள் – மக்கள் அச்சம்