அரவக்குறிச்சி அருகே சாலையோரம் உயிருடன் வீசப்பட்ட 2,000 காடை குஞ்சுகள்

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சியை அடுத்த ரங்கமலை கணவாய் நெடுஞ்சாலை அருகே சுமார் 2000க்கும் மேற்பட்ட காடைகுஞ்சுகளை உயிருடன் மர்ம நபர்கள் வீசிவிட்டு சென்றனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த ரங்கமலை கணவாய் சுமார் 2000க்கும் மேற்பட்ட காடை குஞ்சுகள் பாலத்திற்கு அடியில் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காடை குஞ்சுகள் உலவும் பகுதிக்கு விரைந்தனர். ஒரே இடத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட காடை குஞ்சுகள் உயிருடன் இருப்பதை கண்டு அவற்றை அள்ளிச் சென்றனர்.

Related Stories: