×

வேதாரண்யம் கரியாபட்டினம் சாலையில் திறந்து கிடக்கும் மழை நீர் வடிகாலால் விபத்து அபாயம்-மூடி அமைக்க கோரிக்கை

வேதாரண்யம் : வேதாரண்யம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் மழை நீர் வடிகால் வழிதடங்கள் மேல் மூடி அமைக்கப்படாததால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. வேதாரண்யம் கரியாபட்டினம் சாலையில் அரியாண்டிகுளம் உள்ளது நகரின் மைய பகுதியில்இந்த குளம் ஏற்கனவே வெங்காய தாமரை மண்டி தூர் வாரப்படாமல் மாசுபட்டு கொசு உற்பத்தி மையமாக உள்ளதுஇந்த நிலையில் இந்த குளத்தில் இருந்து மழை காலங்களில் நீர் வடிவதற்கு கான்கிரீட் வடிகால் வாய்க்கால் போடப்பட்டுள்ளது ஆனால் அந்த வடிகால் வாய்க்காலுக்கு மேல் பகுதி மூடப்படாமல் உள்ளது.

அதனால் அந்த வழிதடத்தில் குப்பைகள் சேர்ந்தும் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. ஆகவே நகராட்சி நிர்வாகம் அந்த வடிகால் வழிதடத்தில் மேல் மூடி அமைக்க வேண்டும் மேலும் தற்போது வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு சுற்றுசுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் நகரில் உள்ள பல குளங்கள் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக இருப்பதால் நகராட்சி நிர்வாகம் அந்த குளங்களில் எந்த விதமான பணிகளும் செய்ய முடியவில்லை.இதனால் பல குளங்கள் மாசுபட்ட நிலையிலேயே உள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நகராட்சி மூலம் இந்த குளங்களை தூய்மைப்படுத்த வேண்டும் மேலும் வேதாரண்யம் பகுதியில் வடிகால் வாய்க்கால் அமைந்துள்ள பகுதியில் குப்களை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Vedaranyam Kariyapatnam , Vedaranyam : Because the concrete rain water drainage channels constructed in Vedaranyam municipality area are not covered.
× RELATED வேதாரண்யம் அருகே போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய 5 பேர் கைது