×

அதிமுக பொதுக்குழு மேடையில் சலசலப்பு: வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.பி.முனுசாமி- சி.வி.சண்முகம்

சென்னை:ல் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே பொதுக்குழு மேடையில்  கே.பி.முனுசாமி- சி.வி.சண்முகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பல தடைகளுக்கு பின் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பரபரப்புக்கு மத்தியில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த தீர்மானத்தில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்வது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ஓபிஎஸ் தரப்பை சமாளிக்கும் நோக்கத்துடன் அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வீதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டது. 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க தீர்மானம்; தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அதிமுக அலுவலகத்தில் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும்,  அதிமுக தலைமை அலுவலக கதவை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்ததால், அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக ஈடுபாடு பதவியேற்ற சில நிமிடங்களிலேயே பொதுக்குழு மேடையில் கடுமையாக வாக்குவாத மோதல் ஏற்பட்டது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-யை நீக்கும் விவகாரம் குறித்து கே.பி.முனுசாமி மேடையில் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தபோது, ஓபிஎஸ் நீக்கம் தொடர்பாக நான்தானே சொல்ல வேண்டும் என சி.வி.சண்முகம் கேட்டதால் மேடையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இவர்களின் வாக்குவாதத்தை அடுத்து இருவரிடமும் எடப்பாடி பழனிசாமி பேசி சமரசம் செய்து வைத்ததால், மேடையில் மீண்டும் அமைதி சூழல் நிலவியது.     


Tags : K. GP ,Munusami , AIADMK, General Committee, Platform, Uproar, Argument, KP Munusamy- CV Shanmugam
× RELATED வாஜ்பாய் இல்லாமல் மோடி பிரதமராகி...