×

சிறுவாபுரி முருகன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கால்கோல் நடும் விழா கோலாகலம்..!

திருவள்ளூர்: சிறுவாபுரி முருகன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கால்கோல் நடும் விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆகம விதிப்படி 12ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெறாத கோவில்களில் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் புணரமைப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. சிறுவாபுரி முருகன் கோவிலில் கடந்த 2003ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் 19ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கும்பாபிஷேக விழாவன் தொடக்கமாக யாகசாலை அமைக்க கால்கோல் நடும் விழா நடைபெற்றது. ஆலய வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு யாகசாலைக்கான கால்கோல் மற்றும் ஆலய கோபுரத்திக்கான கால்கோல் நடப்பட்டது.

தற்போது முதல் ஆலயத்தில் கும்பாபிஷேகத்திற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி 1ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கி தொடந்து 5நாட்கள் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு ஆவணி 5ஆம் தேதி ஆகஸ்ட் 21ஞாயிற்றுகிழமை காலை 9மணிமுதல் 10.30மணிக்குள்ளாக மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Churuvapuri Murugan Thirukoko ,Calgol Planting Ceremony ,Kumbaphishekam , Chiruvapuri Murugan Temple, Kumbabhishekam, foundation stone planting ceremony..!
× RELATED ஆரம்பாக்கம் ஊராட்சியில் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்