×

இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே: பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, கடந்த 3 மாதமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் நேற்று முன்தினம் மக்கள் போராட்டம் உச்சகட்டமாக வெடித்து, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் நுழைந்தனர். இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே உயிருக்கு பயந்து தலைமறைவாகி விட்டார். மக்களின் கோபத்தால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலகினார். இதன் காரணமாக, 4 அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், இலங்கையில் அரசு நிர்வாகம் தடுமாற்றம் கண்டுள்ளது.

தப்பி ஓடிய அதிபர் கோத்தபய, தற்போது வரையில் எங்கிருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. அதேபோல, அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்பே அறிவித்தது போன்று அதிபர் பதவியில் இருந்து விலகுகிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் அதிகாரப்பூர்வ முறையில் தெரிவித்து உள்ளார். இதனை இலங்கை பிரதமர் அலுவலகம் இன்று உறுதி செய்துள்ளது. அதன்படி முன்னர் கூறியபடி ஜூலை 13ம் தேதி அதிபர் பதவியில் இருந்து கோத்தபாய விலகுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Gotabaya Rajapaksa ,President ,Sri Lanka ,Prime Minister's Office , Gotabaya Rajapaksa resigns as President of Sri Lanka: Official announcement by Prime Minister's Office
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...