×

அதிமுக சட்ட விதிகளில் அதிரடி திருத்தங்கள்: செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றம்..!

சென்னை: பரபரப்புக்கு மத்தியில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்வது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவில் முதன்முறையாக துணைப் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பது.

அதிமுக பொருளாளருமான அதிகாரரங்கள் அனைத்தையும் பொதுச்செயலாளருக்கு வழங்கி சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சமாளிக்கும் நோக்கத்துடன் அதிமுக சட்ட விதிகளில் ஏராளமான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு பொதுச்செயலாளர் சேர்தலுக்கான வீதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க தீர்மானம்; தேர்தல் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும் தீர்மானம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேறியது. கூட்டத்தில் பேசிய ஆர்.பி உதயகுமார்; அதிமுகவில் தொண்டர்கள் புரட்சி நடைபெற்றுள்ளது. தன்னம்பிக்கையால் உயர்ந்தவர் உழைப்பால் தொண்டர்களின் மனங்களை வென்றவர் இபிஎஸ். ராமனுக்கு மகுடம் சூட்டுகிறபோது லட்சுமணன் தியாகத்தினால் வரலாற்றில் இடம் பெற்றார். ஒன்றரை கோடி தொண்டர்கள் லட்சுமணன் போல இபிஎஸ் உடன் நிற்கிறோம். இவ்வாறு கூறினார்.


Tags : Executive Body , Actionable amendments in AIADMK rules: 16 resolutions passed in the executive committee will be passed in the general body..!
× RELATED ஆன்லைன் வர்த்தகத்தை மிகவும் ஆழ்ந்து...