அதிமுக தலைமைக் கழகம் சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: சென்னை இல்லத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டார். அதிமுக ஒன்றை தலைமை கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இன்று ஒற்றை தலைமை கோரிக்கையை முன்னிறுத்தி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமா அல்லது கூட்டம் நடக்குமா என்பது குறித்து ஐகோர்ட்டின் முக்கிய தீர்ப்பு இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. இதனால் வானகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் இன்று திட்டமிட்டப்படி நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக பொதுக்குழு நடைபெறும் சென்னை வானகரம் பகுதிக்கு ஆயிரக்கணக்காண எடப்பாடி ஆதாரவாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நேற்று இரவு முதல் குவிந்து வருகின்றனர். அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்னை இல்லத்தில் இருந்து பிரச்சார வாகனம் எடப்பாடி பழனிசாமி மூலம் வானகரம் புறப்பட்டார். வழிநெடுகிலும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை இல்லத்தில் இருந்து  ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டார். ஓபிஎஸ் வீட்டில் திரண்டுள்ள அவரது ஆதரவாளர்களும் தலைமை அலுவலகம் செல்கின்றனர்.

அதிமுக தலைமைக் கழகம் சென்று தொண்டர்களை சந்திக்க உள்ள தாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டுள்ள நிலையில் அங்கு ஓபிஎஸ் செல்வதால் பரபரப்பு நிலவி வருகிறது. ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வானகரத்திலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திலும் திரள்கின்றனர்.

Related Stories: