அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்னை இல்லத்தில் இருந்து பிரச்சார வாகனம் மூலம் வானகரம் புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி

சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று காலை 9 மணிக்கு ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது. காலை 9.15 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.  சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு வரவேற்பு பதாகைகளில் ஓபிஎஸ் படம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு மேடையில் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் படங்கள் இடம்பெறவில்லை.

அதிமுக பொதுக்குழு மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெறவில்லை. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் போலி உறுப்பினர்கள் வருவதை தடுக்க நவீன நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்னை இல்லத்தில் இருந்து பிரச்சார வாகனம் மூலம் வானகரம் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.

Related Stories: