தனுஷிடம் நடிப்பு கற்றுக்கொண்டேன்: சம்யுக்தா மேனன்

சென்னை: மலையாளம், கன்னடம், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள சம்யுக்தா மேனன், தமிழில் ‘களறி’, ‘ஜூலை காற்றில்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். தற்போது தனுஷ் ஜோடியாக தமிழில் ‘வாத்தி’, தெலுங்கில் ‘சார்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: வித்­தி­யா­ச­மான கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதற்காக நான் தேசிய விரு­துக்கு முயற்சி செய்கிறேன் என்று அர்த்தமில்லை. தற்போது ‘வாத்தி’, ‘சார்’ ஆகிய படங்களில் டீச்சராக நடிக்­கி­றேன். இப்படங்களின் ஷூட்டிங்கில் தனுஷிடம் இருந்து நடிப்பு சம்பந்தமாக நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். கேரக்டருக்காக எப்படி தயாராவது, வசனங்களை எப்படி உள்வாங்கி நடிப்பது உள்பட பல விஷயங்கள் நல்ல பாடமாக அமைந்தது. எல்லாப் படத்திலும் ஒரேமாதிரி கேரக்டரில் நடிக்க மாட்டேன்.  நான் திரை பின்­னணி கொண்ட குடும்­பத்­தில் இருந்து வரவில்லை. எனவேதான் ஷூட்டிங்கில் ஒவ்வொருவரிடமும் இருந்து நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறேன்.

Related Stories: